fbpx
RETamil Newsஇந்தியா

‘ரேபிட் டெஸ்ட் ‘ கருவியை அடுத்த 2 நாட்களுக்கு பயன்படுத்தவேண்டாம் – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ள இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர கவனம் காட்டி வருகின்றன.

இந்த கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வரும் நிலையில் , ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா ? என்பதை அறிய செய்யப்படும் பரிசோதனைகளின் முடிவுகளை உடனடியாக தெரிந்துகொள்ள போதிய உபகரணங்கள் இந்தியாவில் இல்லை. அதனால் இந்த கொரோனா பரிசோதனை உபகரணங்களை வாங்குவதற்க்கு சீனாவிடம் இந்தியா ஆர்டர் கொடுத்தது.

இந்நிலையில் சீனாவிடம் இந்த கருவிகள் இந்தியாவிற்கு வந்தடைந்ததும். தமிழகத்திற்கும் மற்றும் பல மாநிலத்திற்கும் தேவையான ரேபிட் டெஸ்ட் என்ற கொரோனா பரிசோதனை உபகரணங்கள் அனுப்பிவைக்கப்பட்டது. கொரோனா தொற்று தற்போது அதிகம் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் மூலம் கொரோனா சோதனை முடிவுகளை மிக விரைவாக அறிய முடியும் என சுகாதாரத்துறை தெரிவித்தது.

அதனால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ கருவியை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது இந்த ‘ரேபிட் டெஸ்ட் கிட்-டின் பரிசோதனை முடிவுகள் துல்லியமானதாக இல்லை என்று ராஜஸ்தான் அரசு இதை பயன்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், அடுத்த இரு நாட்களுக்கு கொரோனா நோய் தொற்றை கண்டறிய இந்த ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

ரேபிட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக வெளியான தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

‘ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளின் தரத்தினை பரிசோதித்து வருகிறோம், மீண்டும் இந்த கருவிகளை கொண்டு சோதனையை தொடங்குவது பற்றி விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும்.’என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close