fbpx
RETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

ஊரடங்கு மிகப்பெரும் தோல்வி – ராகுல் காந்தி கடும் விமர்சனம்!

புதுடில்லி:

இந்தியாவில், ஊரடங்கின் நோக்கம் மற்றும் குறிக்கோள் மிகப்பெரும் தோல்வியடைந்து விட்டது. என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் ராகுல் காந்தி அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

இந்தியாவில் மட்டும் தான், எங்கும் நடக்காத கூத்தாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு விலக்கப்படுகிறது.

ஊரடங்கின் குறிக்கோள் மற்றும் நோக்கம் மிகப்பெரும் தோல்வியடைந்துள்ளது.

ஊரடங்கு தோல்வியின் பாதிப்பை இந்தியா இனி  எதிர்கொள்ளப்போகிறது..

21 நாளில் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என நம்மிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஆனால் இப்பொழுது , 60 நாட்களை கடந்தும் தொற்று அதிகரித்து வருகிறது.

இதன் மூலம் ஊரடங்கின் நோக்கமும் குறிக்கோளும் தோல்வியடைந்தது மிக தெளிவாக அனைவருக்கும் தெரிகிறது.

சிறு மற்றும் குறு தொழிலுக்கு பணம் தான் தேவைப்படுகிறது.கடன் அல்ல.

இன்றைய சூழ்நிலையில் அது கொடுக்கப்படாதது வேதனைக்குரியது.

ஊரடங்கில் இருந்து நாம் என்ன எதிர்பார்த்தோமோ அது நிச்சயமாக மக்களுக்கு கிடைக்கவில்லை.

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

இதற்கு அடுத்து செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய மோடி அரசின் திட்டம் தான் என்ன?

பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கவும், நிதியுதவி அளிக்கவும், சிறு குறு தொழிலதிபர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோளாக விடுக்கிறேன்.

இல்லையென்றால், பெரிய இழப்பு ஏற்படும். நாட்டின் ஆன்மா மற்றும் பலமாக உள்ள ஏழை மக்களை நாம் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.

நம்மை பற்றி மற்ற நாடுகள் என்ன நினைக்கின்றன என்பது பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

நாட்டின் ஆன்மா மற்றும் பலத்தை பாதுகாக்க வேண்டியது முக்கியம்.

அரசு அறிவித்தது அனைத்தும் கடன் திட்டங்களாக தான் இருக்கிறது.

அரசு ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும்.மக்களுக்கு உடனடிதேவை நிதியுதவி தானே தவிர கடனுதவி இல்லை.

எல்லையில் என்ன பிரச்னை, அங்கு என்ன நடந்தது, எப்படி நடந்தது என்பது குறித்து அரசு தெளிவாக வெள்ளை அறிக்கை கொடுக்கவேண்டும்

தற்போது யாருக்கும் தெளிவாக எதுவும் தெரியவில்லை. நேபாளம், லடாக்கில் என்ன நடந்தது எப்படி என்பது குறித்தும், தெளிவாக அரசு விளக்க வேண்டும்.

எங்கு போய் வேலை பார்க்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர மாநில அரசுகள் முடிவு செய்யக்கூடாது.இவ்வாறு ராகுல் காந்தி தனது பேட்டியின்போது கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close