fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

பொது இடத்தில் அசுத்தம் செய்பவர்களுக்கு அபராதம்-மராட்டிய அரசு அதிரடி!

தூய்மை இந்தியா திட்டத்திற்கு தனி கவனம் செலுத்திவரும் மராட்டிய அரசு திறந்த வெளியில் மலம் கழிப்பதையும் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மேலும் நகரத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைக்க முதல் நடவடிக்கையாக பொது இடத்தில் குப்பை வீசுதல், எச்சில் உமிழ்தல் , திறந்த வெளியில் சீறுநீர் மற்றும் மலம் கழித்தல் ஆகியவற்றை தடுக்க மராட்டிய அரசு சில சிறந்த வழிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

அதன் அடிப்படையில் பொது இடத்தில் எச்சில் உமிழ்பவர்களுக்கு ரூ.150, குப்பை போடுபவர்களுக்கு ரூ.180, திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு ரூ.200, மலம் கழிப்பவர்களுக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நடைவடிக்கையால் சுற்று சூழல் சீர்கெடுவதை தடுக்க முடியும் என்று நம்பப்படுகின்றது.

Related Articles

Back to top button
Close
Close