fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

மானியமில்லாத கேஸ் சிலிண்டர் 37 ரூபாய் உயர்வு…! மக்கள் அதிர்ச்சி!!

Subsidy LPG cylinder rate hiked

சென்னை:

மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை இந்த மாதம் ரூ.37 அதிகரித்துள்ளது.

மார்ச் முதல் 3வது மாதமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்து காணப்பட்டது. ஆனால் சென்னையில் மானியமில்லாத வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37 உயர்ந்து காணப்படுகிறது.

அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையில் மானியம் அல்லாத 14 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை கடந்த மாதத்தைவிட 37 ரூபாய் உயர்த்தி 606 ரூபாய் 50 காசுகளாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மே மாதம் ரூ.569.50க்கு சிலிண்டர் விற்பனை செய்யப்பட்டது. இந்த சிலிண்டர் விலை இப்போது ரூ.606.50 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 593 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் 31 ரூபாய் 50  காசுகள் உயர்ந்து 616 ரூபாயாக இருக்கிறது. மும்பையில் 11 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து 590 ரூபாய் 50 காசுகளாக உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close