தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் நிலவரம் என்ன ? பார்க்கலாம்

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளையும் தாக்கியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தாக விளங்குகிறது.
அப்படிபட்ட ஆபத்து நிறைந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த கொரோன வைரஸ் அதன் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டே வருகின்றது.அவ்வாறுதான் இந்த கொரோனா வைரஸ் தமிழகத்திலும் உள்ள அணைத்து மாவட்டடங்களிலும் பரவி வருகின்றது. தற்போது தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏப்ரல்-9-ஆம் தேதியன்று கொரோனா வைரஸ் தோற்று எத்தனை நபர்களுக்கு உள்ளது என்பது குறித்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதைக்கட்டுப்படுத்த முதற்கட்ட நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி எனினும் இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவிக்கொண்டே வருகின்றது.
அவ்வாறு கொரோனா பரவிவரும் மாநிலங்களில் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
நாடு முழுவதும் ஒரே நாளில் 698 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் , நாடு முழுவதும் பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 169-ஆக உயர்ந்துள்ளது.
கண்ணுக்கு தெரியும் எதிரிகளையும் அழித்துவிடலாம் கண்ணுக்கு தெரியாத எதிரியாக அமைந்துள்ள இந்த கொரோனா வைரஸை அழிப்பது அனைவருக்கும் ஒரு கேள்விக்குறியாக உள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.
மராட்டிய மாநிலத்தில் ஆயிரத்தி 297 பெற்வ பாதிக்கப்பட்டு உள்ளனர். அம்மாநிலத்தில் மட்டும் 72 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மும்பையில் ஒரே நாளில் 79 பேருக்கு வைரஸ் தோற்று உறுதியானதால் , அந்நகரில் மட்டும் 775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
8 பேரை பலிவாங்கிய கொரோனாவுக்கு தமிழகத்தில் அந்த தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 834-ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 669 பேரும், ராஜஸ்தானில் 430 பேரும், தெலங்கானாவில் 427 பேரும் , உத்திரபிரதேசத்தில் 361 பேரும், கேரளாவில் 345 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குஜராத்தில் 241, மத்திய பிரதேசம் – 229, ஹரியானா – 147, கர்நாடக – 197 , மேற்கு வங்காளம் – 103, பஞ்சாபில்- 101 பெரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் தற்போது ஒரே நாளில் மட்டும் 698 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் வைரஸ் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 169-ஆக உயர்ந்துள்ளது.















