fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமா..? சிறப்பு அதிகாரி பதில்

Corona cases less in Chennai says radhakrishan

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. 3ம் கட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிகிறது. அதன் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை.

ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் மட்டுமே 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

இந் நிலையில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் இறப்பு எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. சென்னையின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.

களத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். விரைவில் நல்ல சேதி வரும். கொரோனா குறித்து தேவையின்று பயப்பட வேண்டாம்.

சென்னையில் போர்க்கால அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி வேறு இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர் என்றார்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close