தமிழகத்தில் 144 தடை தேவையா? தேவை இல்லையா ? பார்க்கலாம்

நாம எல்லாரும் பாதுகாப்பை இருக்கோம் என்ற கிழவிக்கு பதில் இப்போ நாம எல்லாரோ பாதுகாப்பாக தான் இருக்கோம் , ஆனா இனிமே பாதுகாப்பா இருப்போமா என்ற கேள்விக்கு பதில் மக்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்துதான் இருக்க போகிறது. மிகப்பெரிய துயரம் இந்தியாவுக்கு வரும் என்று சொல்லி பல பேர் சொல்லிட்டு இருந்தாங்க ஆனா அந்த எச்சரிக்கைகளை நாம படித்தோமா இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் நடந்த அசம்பாவிதம் இந்தியாவிலும் நடக்குமா என நிறைய கேள்விகள் இருக்கு இந்த மாதிரியான எல்லா கேள்விகளையும் நாம தட்டி பாத்து அதுக்குண்டான விழிப்புணர்வைதான் நாம பெற போறோம்.
பணம் ஒரு அச்சடிக்கப்பட்ட ஆயுதம் என்று சொல்லுவார்கள் அந்த ஆயுதம் ரொம்பபெரிய அளவில் இப்போ விளையாட தொடங்கியுள்ளது. இப்போ இந்த பங்கு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 2020-ல் இருந்தே எடுத்து மதுட்டோன ஜனவரியில் இருந்து மார்ச் வரை மட்டுமே எடுத்துட்டு பார்தோனா 39 லட்சம் கோடி ரூபாய் பங்கு வர்த்தகத்திலிருந்து காணாமல் போகியிருக்கு இந்த சில மாதமாகவே 3900 புள்ளிகள் குறைந்து வருகின்றது.
வரலாற்றில் 1000 புள்ளிகள் குறைவதே என்பது ரொம்ப கம்மியாத்தான் நடக்கும் இப்போ கடைசி இரண்டு மாதமாகவே 1000 புள்ளிகள் வீழ்ந்து விட்டது என அடிக்கடி நாம கேட்டு வருகிறோம். இந்த பங்கு சந்தை மேலும் வீழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது அதற்கு காரணம் எல்லா இடங்களிலும் உள்ள லாக் டௌன். இந்தியாவில் கிட்டத்தட்ட 75 மாவட்டங்கள் ஊரடங்கு செய்யப்பட்டதால சொல்லப்படுகின்றது. இந்த ஊரடங்கு தேவைதானா என கேட்கப்பட்டால் நிச்சயம் தேவை.
உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் பல நாடுகளை பெருமளவில் பாதித்துள்ளது. இத்தாலி, இஸ்பெயின் , அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த கொரோனா வைரஸானது மக்களை பெருமளவில் பாதித்துள்ளதால் அங்குள்ள அதிபர்களும், அரசியல்வாதிகள் கண்ணீர் வடித்துக்கொண்டுள்ளார்கள். ஏனென்றால் அவர்கள் இதை இந்த அளவிற்கு ஆபத்து என உணர்ந்துகொள்ளாததுதான்.

இந்தியாவில் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் என நினைத்தாலும் இந்த இடத்தில் நாம சில உண்மையான செய்திகளையும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இருக்கின்றது. அதாவது இந்த கொரோன வைரசை டெஸ்ட் பண்ற விகிதம் குறைவு அதன் காரணமாகத்தான் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் இன்றளவும் இந்தியாவில் நமக்கு தெரியவில்லை வரும் நாட்களில் இந்தியாவில் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புகளே மிக அதிகம்.
நாம எந்தளவுக்கு இந்த வைரஸின் ஆபத்து தெரியாமல் வெளியில் தேவையுல்லாமல் அலைகிறோமோ அந்த அளவிற்கு இந்த கொரோனா வைரஸ் பரவும் , இந்த ஊரடங்கின் மூலமாக நாம வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்தோனா இந்த வைரஸின் பரவும் திறனானது குறையும் .
இதன் காரணமாகத்தான் இந்தியா முழுவது 144 தடை ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போ நாம இந்த ஊரடங்கின் மூலமா இந்த வைரஸை துரத்திட முடியுமான்னு சொன்னா அதை நாம துரத்துறோமோ இல்லையோ அந்த வைரஸ் பரவாம பார்த்துக்கொள்ள முடியும் என்று தான் சொல்ல முடியும்.
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் உள்ள மக்களில் எத்தனை நபர்களுக்கு உள்ளது என்பது இதுவரை சரியான அளவில் யாருக்கும் தெரியாத நிலையில் அவர்களின் மூலமாக இந்த வைரஸானது எத்தனை நபர்களுக்கு பரவியுள்ளது என்பது வரும் சில நாட்களில் தான் தெரியும்.
முதலில் நமக்கு தெரிய வேண்டியது என்ன வென்றால் இந்த கொரோனா வைரஸானது தொடுதல் மற்றும் காற்றின் மூலமாகவும் பரவுது என்பது நன்றாக தெரிந்துகொள்ளவேண்டும் எனவே அனைவரும் பாதுகாப்பாக இருந்துகொள்ளவேண்டும்.
இந்த 144 தடை உத்தரவு என்பது எந்தெந்த விஷயங்களுக்கு என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
* தனியார் நிறுவனங்கள் இயங்கிக்கொள்ளலாம் ஆனால் வீட்டில் இருந்துகொண்டே வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்.
* அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கப்படும் தொழிற்சாலைகள் இயங்கலாம் ஆனால் பணியாளர்கள் குறைத்துவிட வேண்டும். தேவையில்லாமல் அதிக பணியாளர்கள் இருக்கக்கூடாது.
* தேவையில்லாத அதாவது அத்தியாவசிய பொருட்கள் அல்லாத தொழிற்ச்சாலைகள் முடிவிடவேண்டும்.
* போக்குவரத்து என்று சொல்லும் போது ஆட்டோ,கார் போன்ற வாகனங்களை தவிர்த்து, அத்தியாவசிய பொருட்களுக்காக அதாவது காய்கறி, பழங்கள் , அரிசி, மீன், பருப்பு இவற்றிற்கு மட்டுமே வாகனங்கள் ஊட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
* மருத்துவமனைகள் , மருந்தகங்கள் இவை மட்டுமே திறந்து இருக்க வேண்டும்.
* சினிமா , பொழுதுபோக்கு தேவையில்லாத போன்ற மற்ற கடைகள் மூடிவிடவேண்டும்.
* எல்லா பள்ளி, கல்லூரிகளும் மூடிவிடவேண்டும் . தேவையில்லாமல் யாரும் வெளியில் வரக்கூடாது.
* எந்த ஒரு சுப காரியங்களும், விழாக்களும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் நமக்கு தெரியாமலேயே இந்த வைரஸானது பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
* முதியோர் , நோயாளிகள் , கர்ப்பிணி பெண்கள் இவர்களுக்கு தேவையான னால திட்டத்தினை அரசு அதிகறிகள் மேற்கொள்ள வேண்டும்.
* சில உணவகங்கள் திறக்கப்பட்டாலும் அங்கு சாப்பிட அனுமதி கிடையாது,ஆனால் பார்சல் செய்து கொடுக்கப்படும்.
* தேவையின்றி நாம் வெளியில் சுத்துவதை குறைத்துக்கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.
இவ்வாறு அரசாங்கம் செய்வது எல்லாம் நம் ஒவ்வொருவரின் நலனுக்கு என்று தான் நினைக்க வேண்டுமே தவிர அலட்சியபடுத்தக்கூடாது. நம் உயிர் நம் கையில் தான் உள்ளது என்று நினைத்து அரசாங்கம் போட்டுள்ள இந்த ஊரடங்கை கடைபிடித்தால் மட்டுமே நாம் இந்த கொரோன வைரஸை ஒழிக்கமுடியும்.
சிலர் பயப்படுவார்கள் நமக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் குறைந்து விடுமோ என்று , ஆனால் அதற்கும் நம் அரசாங்கம் அனைவருக்கும் முழு சம்பளம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. அது மட்டும் அல்லாமல் குடும்ப அட்டைதரர்களுக்கு 1000 ரூபாயும் இலவச பொருட்களும் வழங்கியுள்ளது. இவ்வாறு இந்த தொட்டு நோயின் தீவிரத்தை உணர்ந்த நம் அரசாங்கம் சில சலுகைகளை வழங்கி வருகின்றது. அதே போல் நாமும் நமக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அளவோடு வாங்கிக்கொள்ளவேண்டும். மற்றவர்களுக்கு கிடைக்காதவாறு அதை நாம் பதுக்கிவிட கூடாது. நம்மால் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.

இத்தாலியில் அதிகஅளவில் உயிரிழப்பு ஏற்பட்டதால் சில பாதுகாப்பு பணிகளுக்காக அங்குள்ள இளைஞர்கள் பயன்படுத்தி கொல்லப்பட்டார்கள்.அந்த நிலைமை நம் இந்திய நாட்டிற்கு வந்துவிட கூடாது என்று அனைவரும் நினைத்து வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். அதன் மூலமாக மட்டும் தான் இந்த கொரோனா வைரஸை பரவாமல் பார்த்துக்கொள்ளமுடியும்.
அதனால் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்து நாட்டையும் , வீட்டையும் நம் உயிரையும் காத்துக்கொள்ளலாம்.















