fbpx
RETamil News

மாரடைப்பால் மரணமடைந்த கல்லூரி மாணவியின் மரணத்தை முன்னிட்டு மாணவர்கள் போராட்டம்!

சென்னையை சேர்ந்த 18 வயது மட்டுமே நிரம்பிய மாணவியை கட்டாயப்படுத்தி விளையாட சொல்லி வற்புறுத்தியதால் மாரடைப்பு ஏற்பட்டு அந்த மாணவி மரணமடைந்தால் இந்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேலையூரை சேர்ந்தவர் மஹிமா என்பவர் இவர் தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரியில் முதலாம் ஆண்டு வேதியியல் பாடம் படித்து வந்தார்.

கடந்த திங்கட்கிழமை மாலை 5.30 மணி அளவில் கல்லூரி வளாகத்தில் கூடைப்பந்து விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். பின்னர் அங்கிருந்த மாணவர்களும் , கல்லூரி நிர்வாகமும் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மஹிமா மருத்துவமனைக்கு சென்றடைவதற்கு முன்னரே, மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டதாக மருத்துவர் கூறினார். இதையடுத்து அவரது உடலை உடற்கூறு செய்யப்பட்டு , அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவிகள் அனைவரையும் விளையாட்டில் ஈடுபடும்படி கட்டாய படுத்தியதாக மற்ற மாணவர்கள் குற்றம் சாட்டினர்.எனவே மஹிமாவின் மரணத்திற்காகவும் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்தும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close