fbpx
உணவு

சுவையான புதினா சட்னி!

புதினா சட்னி அரைக்க தேவையான பொருட்கள்:

புதினா ஒரு கட்டு
கொத்துமல்லி தழை அரைக்கட்டு
இஞ்சி
காய்ந்த மிளகாய்-4, பச்சை மிளகாய்-1
தேங்கய் அரை மூடி
புளி கோலிக்குண்டு அளவு
உப்பு தேவையான அளவு
பெருங்காய தூள் ஒரு சிட்டிகை
காடலை எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
முழு உளுந்து ஒரு கைப்பிடி

புதினா சட்னி தாளிக்க:

கடுகு, உளுந்து 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை

செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். மிளகாய் போட்டு வறுத்தெடுக்கவும். பின்னர் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வறுத்தெடுக்கவும். அதன் பின் பெருங்காயத்தூள் இஞ்சி துருவிய தேங்காய் ஆகியவற்றை கடாயில் போட்டு மிதமான தீயில் வருத்தபின் நன்றாக அலசி சுத்தம் செய்து வைத்திருக்கும் புதினா கொத்துமல்லி தழையை சிறிது எண்ணையில் வதக்கி வைத்து கொள்ளவும்.

இதனை சிறிது நேரம் ஆற வைத்து பின்னர் புளியும் சேர்த்து அரைக்கவும். முதலில் உளுத்தம்பருப்பு, தேங்காய், இஞ்சி, புளி, உப்பு, பெருங்காய தூள் சேர்த்து அரைத்தபின் புதினா கொத்துமல்லி தழையை சேர்த்து அரைக்கவும். புதினா சட்னி அரைத்த பின் அதனை ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். தாளிக்க ஒரு வாணலியில் எண்ணெய் கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து புதினா சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

சுவையான புதினா சட்னி தயார். இதனை இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிடலாம். புதினா மற்றும் இஞ்சி செரிமான கோளாறுகளை அகற்றும் சக்தி கொண்டது.

Related Articles

Back to top button
Close
Close