fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

10ம் வகுப்பு பொதுத்தேர்வு மீண்டும் தள்ளி வைப்பு…! புதிய அட்டவணையும் வெளியீடு

SSLC Exam again postponed

சென்னை: எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

முதலமைச்சர் பழனிசாமியிள் ஒப்புதலுடன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 31ம் தேதி ஊரடங்கு முடிந்த மறுநாள் தேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் புதிய தேர்வு அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.

அதன்படி, ஜூன் 15ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 11ம் வகுப்பு தேர்வு ஜூன் 16ம் தேதி நடைபெறும் என்றும் 12ம் வகுப்பு மறு தேர்வு ஜூன் 18ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை:

ஜூன் 15-ம் தேதி மொழிப்பாடம்

ஜூன் 17-ம் தேதி ஆங்கிலப்பாடம்

ஜூன் 19-ம் தேதி கணிதம்

ஜூன் 20-ம் தேதி மொழிப்பாடம் (விருப்பத் தேர்வு)

ஜூன் 22-ம் தேதி அறிவியல்

ஜூன் 24-ம் தேதி சமூக அறிவியல்

ஜூன் 25-ம் தேதி தொழில்கல்வி தேர்வு

Tags

Related Articles

Back to top button
Close
Close