fbpx
RETamil News

மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் காலஅவகாசம் குறைப்பு ; முதலமைச்சர் அறிவிப்பு

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவது ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இந்த ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து , பிற செயல்களுக்காக வீடை விட்டு வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றன.

மக்கள் அத்தியாவசிய பொருட்களான உணவு , காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்க காலநேரம் பற்றிய விவரத்தினை தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் காய்கறி மற்றும் மாளிகைசாமான் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க மற்றும் விற்க காலநேரம் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த காலஅவகாசம் குறைக்கப்பட்டு புதிய அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.அதன் அடிப்படையில் மக்கள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் பொருட்களை வாங்கும் பொது சமூக இடைவெளிவிட்டு பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அரசின் விதிமுறைகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close