கேரளாவில் கலவரம் செய்ததாக 3178 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கியதை எதிர்க்கும் வகையில் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இவ்வாறு சபரிமலையில் பாரம்பரியத்தை மீறி பெண்கள் தரிசனம் செய்ததற்கு பா.ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை எதிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் அந்த கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளமாநிலத்தில் முழுவது முழு அடைப்பு போராட்டம் நடத்த சபரிமலை கர்மசமிதி அமைப்பு அழைப்புவிடுத்து இருந்தது.

இந்த போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக 3,176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.37,979 பேர் மீது 1286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு பா.ஜனதா கட்சி நடத்திய கடையடைப்பு போராட்டத்தில் பல இடங்களில் கலவரம் செய்ததால் வன்முறை வெடித்தது.இதனால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.















