fbpx
RETamil News

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி , யு கே.ஜி வகுப்புகள் – செங்கோட்டையன் அறிவிப்பு.

அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி , யு கே.ஜி வகுப்புகள் முதலமைச்சரின் அனுமதி பெற்று விரைவில் துவக்கப்படு என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது; இனி அரசு பள்ளிகளிலேயே எல்.கே.ஜி , யு கே.ஜி வகுப்புகள் முதலமைச்சரின் அனுமதி பெற்று ஜனவரி மாதத்திற்குள் விரைவில் துவக்கப்படும் என்று கூறினார்.

மேலும் ஜனவரி மாதம் 10-ஆம் தேதிக்குள் மடிக்கணினி கார்களுக்கு வழக்கப்படும் அது மட்டும் அல்லாமல் 14 வகையான விலையில்லா பொருட்களும் மாணவ மாணவிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், டெல்டா மாவட்டங்களில் பொறுத்தவரை புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அணைத்து சீரமைக்கும் பணிகளும் நிறைவடைந்து விட்டது.

மேலும் புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நீட் தேர்வு பயிற்சிக்கான கால அவகாசல் அளிக்கப்பட்டிருந்தது. அதனால் நீட் தேர்வில் எந்த ஒரு தடையும் எல்லை என்று கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close