fbpx
RETamil News

இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக விளங்குகிறது தமிழகம் ; தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமித பேச்சு

தமிழகம் இந்தியாவிலேயே மருத்துவ தலைநகரமாக விளங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

சென்னை பெருங்குடி அருகே எம்.ஜி.ஆர் சாலையில் புதிய மருத்துவமனை திறப்புவிழா நடைபெற்றது அதில் பேசிய நம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி , உயிரை காப்பாற்றும் மருத்துவர்களை நம் மக்கள் தெய்வமாக பார்க்கின்றனர் என்று கூறினார். தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டாலும் தொடர் முயற்சியாலும் தான் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய போவதாக கூறினார்.

இவ்வாறு தமிழக மருத்துவதுறை மக்களுக்கு சிறந்த சேவையை செய்து வருகின்றது. மேலும் மகப்பேறுக்கான பல்வேறு முன்னோடி திட்டங்களை தமிழக அரசு அமல் படுத்தி வருவதாகவும் , இத்தகைய பல்வேறு காரணங்களால் தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னோடியாக திகழ்வதாக முதல்வர் கூறினார்.

அவரை தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் அவர்கள் உலகிலேயே தமிழகம் தான் மருத்துவத்துறையில் சிறந்து விளங்குவதாக கூறியுள்ளார். மேலும் ஜெயலலிதா அவர்கள் அறிமுகப்படுத்திய மருத்துவ காப்பீட்டு திட்டம் தமிழகத்தில் மிக சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறியுள்ளார். இவ்வாறு உயர்தரமான மருத்துவமனைகளுடன் , உயர்தரமான மருத்துவர்களும் தமிழகத்தில் இருப்பதால் தான் தமிழகம் இந்தியாவின் மருத்துவத்துறையின் தலைநகரமாக விளங்குகிறது என்று கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close