fbpx
REதமிழ்நாடு

வருமான வரி சோதனைகள் விவகாரம்:ஆளுநரை இன்று சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனைகள் தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து மனு அளிக்கிறார்.

கடந்த சில நாட்களாக சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள், மற்றும் வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.

அதில் 180 கோடி ரூபாய் பணம் மற்றும் 105 கிலோ தங்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

ஏற்கனவே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடத்தப்பட்ட பல்வேறு வருமான வரி சோதனைகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் ஸ்டாலின் முறையிட உள்ளதாகத் தெரிகிறது.

இதற்காக இன்று காலை 11 மணிக்கு ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேரம் ஒதுக்கியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close