RETamil Newsஇந்தியாதமிழ்நாடு
வட மாநிலத்தில் கன மழை; இன்னும் சில நாட்களுக்கு தொடரும் – இந்திய வானிலை ஆய்வு மையம் .
வட மாநிலங்களில் பெய்து கொண்டிருக்கும் கன மழை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இம்மாதத்துடன் முடிவடைகின்றது. அதனால் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகமாகவே உள்ளது.
தற்போது வங்க கடலில் நிலவி வரும் திடீர் மாற்றத்தால் பல இடங்களில் மழை பெய்து வருகின்றது.
சென்னை உள்பட பல இடங்களில் மழை பெய்தது. வானமும் மேகமூட்டத்துடன் காணப்படுகின்றது.
தமிழகத்தின் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் , நீலகிரி , கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.