RETamil Newsஇந்தியாதமிழ்நாடு
மோடியின் ஆட்சியில் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமாக உயர்ந்தது ரிலையன்ஸ்
7.51 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்துடன் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உயர்ந்துள்ளது.
முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் நிறுவனம் எண்ணெய், துணி உற்பத்தி, தொலைத் தொடர்பு என பல்வேறு துறைகளில் வெற்றிகரமாக தடம் பதித்து வருகிறது.
செவ்வாய்க்கிழமை தேசிய பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவன பங்கு விலை 2.84 சதவீதம் உயர்ந்து 1,184 ரூபாய் அதிகரித்தது.
இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி ரூபாய் 7.51லட்சம் கோடி சந்தை மூலதனத்துடன் நாட்டிலேயே மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
நடப்பு ஆண்டில் மட்டும் ரிலையன்ஸ் பங்கின் விலை 28.57 சதவீதம் அதிகரித்துள்ளது