fbpx
RETamil News

மைசூருவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 6 பேர் உயிரிழப்பு , 80-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள கோவில் ஒன்றில் பக்தர்களுக்கு கொடுக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட மக்கள் திடீரென மயக்கம் அடைந்தனர். என்ன காரணம் என்று கண்டுபிப்பதற்குள் 6 பேர் உயிரிழந்துள்ளனர்,80-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் அந்த பிரசாதத்தை சாப்பிட்ட 60-க்கும் மேற்பட்ட காகங்களும் உயிரிழந்துள்ளனர் . இவ்வாறு ஏற்பட்ட உயிரிழப்பிற்கு கரணம் என்னவென்று தெரியவில்லை.எனவே இது தொடர்பான விசாரணை தொடங்கப்பட உள்ளது.

கோவில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close