மூலிகை வைத்தியம் – வேம்பு !!
ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் வளர்க்கக்கூடிய மரங்களில் ஒன்று வேப்பமரம். இது அனைத்து விதமான மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது.
இம்மரத்தின் இலை, பூ, வேர், தண்டு, விதை அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வேம்பில் பூஞ்ஜை மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் நிறைந்துள்ளது. பல விதமான இயற்கை மருத்துவத்தில் இது பயன்படுகிறது. ஓர் மரம் மருந்தகமாக செயல்படுகிறது.
வேம்புவின் மூலிகை மருத்துவம் வயது முதிர்வை குறைக்கும். வேம்புவின் இலை சருமத்தை, புறஊதா கதிர்களிடமிருந்து பாதுகாக்கிறது. இதில் நிறைந்துள்ள வைட்டமின்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் தோளில் உருவாகும் சுருக்கங்களை நீக்கி என்றும் எளிமையுடன் வைத்திருக்கும்.
வேம்பில் பூஞ்ஜை மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் இருப்பதால் சின்னம்மை (சிக்கன் பாக்ஸ் ) ஏற்பட்டவர்களுக்கு, இதனை அரைத்து பூசி வேப்பிலை தண்ணீரினால் குளித்து வந்தால் அதன் வடுக்கள் மறையும்.
வேம்பு சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் செயல்படுகிறது. அரைத்து வைத்த வேப்பிலையை ஒரு காட்டன் துணியில் பூசி ஜன்னலின் அருகே வைத்தால் நம் வீட்டை எந்த பூச்சியும் எட்டிப்பார்க்காது. வேப்பிலையை தீயிட்டு எரிப்பதால் கொசுவின் அச்சுருத்தல் இருக்காது.
வேம்பு ‘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்’. கசப்பான வேம்புவை கொதிக்க வைத்து தினமும் அருந்துவதால் ஜுரம் குணமாகும், குறிப்பாக மலேரியாவை குணப்படுத்த இது உதவுகிறது.
வேம்புவின் குச்சி பல் துலக்க உதவுகிறது. இது பூஞ்சை, பாக்டீரியா, அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. (anti inflammatory, anti fungal, anti bacteria) எனவே பற்களில் ஏற்படும் தொற்று மற்றும் நோய்களிலிருந்து நம்மை காக்கிறது.
வேப்பிலையை அரைத்து தலைமுடியில் தேய்த்து குளிப்பதால் வலிமையான மற்றும் நீண்ட கூந்தலை பெறலாம். பொடுகு வராமல் தடுக்கும்.
வேம்புவில் இன்னும் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இது ஒரு இயற்கை வரபிராசதமாக கருதப்படுகிறது.