முட்டை ஃபிரைடு ரைஸ் (egg fried rice)
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி 200 கி
எண்ணெய் 2 மேஜைக்கரண்டி
உப்பு தேவையான அளவு
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 3
காரட் 2
பீன்ஸ் 5
முட்டைக்கோஸ் 200 கி
குடமிளகாய் 1
வெங்காயத்தாள்
சில்லி சாஸ் 1 ஸ்பூன்
சோயா சாஸ் 1 ஸ்பூன்
முட்டை 4
மிளகு தூள்
செய்முறை:
பாசுமதி அரிசியை 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதனுள் பாசுமதி அரிசி சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். சாதம் 3/4 பாகம் வெந்ததும் சாதத்தை வடித்து விடவும். தண்ணீர் நன்றாக வடிந்ததும் ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு அதனுடன் எண்ணெய் சேர்த்து குலுக்கி விடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி முட்டை, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் முட்டை நன்றாக வேக விடவும்.
மற்றொறு வாணலியில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள குடமிளகாய், காரட், பீன்ஸ், முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இது 90 சதவீதம் வெந்ததும் இதனுடன் சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து வதக்கவும். முட்டையை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும். வேகவைத்த சாதத்தை இதனுடன் சேர்த்து கிளறவும். மிளகு தூள் சேர்க்கவும். 5-10 நிமிடம் சாதம் உடையாமல் மிதமான சூட்டில் கிளறி வெங்காய தாள் சேர்த்து பின் இறக்கி பரிமாறவும்.
சூடான ருசியான முட்டை ஃபிரைடு ரைஸ் தயார். சுவைத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும்.