மாணவி உயிரிழப்புக்கு நாங்கள் பொறுப்பில்லை – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
கோவை கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பேரிடர் கால தற்காப்பு பயிற்சியில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்திற்குக்கும் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம்த்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அப்போது பயிற்சியாளர் ஆறுமுகம் அதே கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி லோகேஸ்வரியை இரண்டாம் மாடியில் இருந்து குதிக்க வலியுறுத்தினார் அதற்கு அந்த மாணவி தயக்கம் காட்டியதால் பயிற்சியாளர் ஆறுமுகம் மாணவியை கீழே தள்ளி விட்டுள்ளார்.
இதில் எதிர்பாராதவிதமாக மாணவியின் தலை முதல் தளத்தில் இருந்த சன்ஷெடில் பலமாக மோதி மாணவியின் தலை கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து படுகாயம் அடைந்த மாணவி உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் அங்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் பின்னர் மாணவி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ” இந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது இதனால் ஒரு இளம்பெண்ணின் உயிரை நாம் இழந்துள்ளோம் இது குறித்து அப்பெண்ணின் குடும்பத்திற்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இருப்பினும் இந்த சம்பவத்திற்கும் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் எந்த தொடர்பும் இல்லை இது போன்ற பயிற்சிகளை அளிக்க அந்த பயிற்சியாளருக்கு எந்தவித அனுமதியையும் என்டிஎம்ஏ அளிக்கவில்லை ” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.