fbpx
RETamil News

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை சோனியா காந்தியால் திறக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வருமான , தி .மு.க தலைவருமான மு.கருணாநிதி அவர்களின் சிலை இன்று சென்னையில் திறக்கப்பட்டது.இவ்வாறு அமைக்கப்பட்ட இந்த சிலை 9 அடி உயரத்தில் வெண்கலத்தால் செய்யப்பட்டதாகவும், பளிங்கு கற்களால் பீடம் அமைத்து அதன் மேல் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.அது மட்டும் அல்லாமல் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா அவர்களின் சிலையும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் விமானம் மூலம் சென்னை சென்னை வந்தடைந்தனர். விழாவிற்கு வந்தவர்களை தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார், பொது செயலாளர் க. அன்பழகன் வரவேற்றார். மேலும் இந்த விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு , கேரளா முதல்வர் பினராயு விஜயன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

 

இதைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை சரியாக 5.16 மணிக்கு திறந்துவைத்தார் .பின்னர் அண்ணா அவர்களின் சிலையும் திறக்கப்பட்டது.

மேலும் கருணாநிதி அவர்களின் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மோதிரம் அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு தலைவர்கள் அனைவரும் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.

Related Articles

Back to top button
Close
Close