fbpx
GeneralTamil News

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு !

2018-ஆம் ஆண்டு மருத்துவத்திற்க்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், 2018-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

மருத்துவத்திற்காக நோபல் பரிசு அமெரிக்காவின் ஜேம்ஸ் பி.ஆலீசன், ஜப்பானைச் சேர்ந்த தசுகோ ஹோன்ஜோ ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருவரும் நோயெதிர்ப்பு மருத்துவ வல்லுநர்கள் ஆவர். புற்றுநோயைக் குணப்படுத்தும் மருத்துவ கண்டுபிடிப்பிற்காக இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசும், 5-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 8-ம்  தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close