fbpx
RETamil Newsஅரசியல்இந்தியா

மத்திய அமைச்சர் அனந்தகுமார் மறைவு: பெங்களூருவில் நாளை மாலை இறுதிச்சடங்கு…

உடல்நலக்குறைவால் காலமான மத்திய அமைச்சர் அனந்தகுமாரின் இறுதிச் சடங்கு நாளை மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரசாயனம், உரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக வகித்தவர் அனந்தகுமார். இவருக்கு வயது 59.

இளம் வயதில் சமூக பணியாற்ற ஆர்வம் கொண்டு அரசியலுக்கு வந்த அனந்தகுமார், பெங்களூரு தெற்கு தொகுதியில் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், 1996-ம் ஆண்டு தெற்கு பெங்களூரு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு புற்றுநோயால் அவதிப்பட்ட அனந்தகுமார், அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் காலமானார்.

அனந்தகுமாரின் மறைவால், கர்நாடக பா.ஜ.க.வினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே, அனந்தகுமாரின் உடல் சொந்த ஊரான பசனகுடியில் நாளை காலை 7 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 7 மணி முதல் 9 மணி வரை பெங்களூருவில் உள்ள பாஜக அலுவலகத்திலும், 9 மணி முதல் மாலை வரை நேஷனல் கல்லூரிலும் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெங்களூருவில் நாளை மாலை அனந்தகுமாரின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

அனந்தகுமாரின் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close