மதுரை : விரைவில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர் போல மதுரை மாறவுள்ளது என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
மதுரை வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க அணையில் தெர்மாகோலை போட்டு மூடி பலரின் விமர்சனத்திற்கு உள்ளானவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. இந்நிலையில் மதுரையில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் மதுரையில் தொழில் முதலீட்டாளர்கள் வர உள்ளார்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைப் போல் வைகை நதி கரையில் உலகத் தரத்தில் பூங்காக்கள் அமைய உள்ளன. விரைவில், மதுரையும் ஆஸ்திரேலியாவின் சிட்னியை போல் மாறும்” எனத் தெரிவித்துள்ளார்.