போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபர் மர்மமான முறையில் மரணம்!
ராமநாதபுரத்தில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நபரை காவல்துறையினர் அடித்து கொன்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொள்ளை வழக்கு ஒன்றில் சந்தேகத்தின் அடிப்படையில் வடக்கூரை சேர்ந்த மணிகண்டனை அவரது வீட்டிற்கு நேற்று முன் தினம் நள்ளிரவு சென்ற முதுகுளத்தூர் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
நேற்று காலை மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதை ஏற்க மறுத்த உறவினர்கள் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சம்பவம் குறித்து ஏ.டி.எஸ்பி வெள்ளைத்துரை தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது போன்ற விசாரணைக்கு அழைத்து செல்பவர்கள் மரணம் அடைவது தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால் இதற்க்கு சரியான விடை இதுவரை கிடைக்கவில்லை.
காவல் துறையினர் மக்களுக்கு பாதுகாப்பு என்ற நிலைமை போய் காவல் துறையினரிடம் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நிலைமை வந்து விட்டதாக மக்கள் வருத்தம் தெரிவிடுகின்றனர்.