பிரபாகரனின் குழந்தைகள் முகத்தில் நான் என்னை பார்க்கிறேன்-ராகுல் காந்தி உருக்கம்…
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி 4 நாள் சுற்றுப்பயணமாக ஜெர்மனி மற்றும் பிரிட்டன் சென்றுள்ளார்.
இன்று ஜெர்மனியின் ‘ஹேம்பர்க்’ நகரிலுள்ள ஒரு கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, தீவிரவாத செயல்பாடுகள் குறித்து பேசினார்.
விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பற்றி பேசினார். அதில், 2009 ஆம் அண்டு விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டதற்கு தானும் தனது சகோதரியும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
அவர் மீது செலுத்தப்பட்ட வன்முறை அவரது குழந்தைகள் உள்பட அவரைச் சேர்ந்த அனைவரையும் பாதித்தது.
பிரபாகரன் குழந்தைகள் முகத்தில் நான் என்னை பார்க்கிறேன். தீவீரவாதத்தினால் தனிப்பட்ட முறையில் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன்.
எனது பாட்டியையும் தந்தையையும் தீவிரவாதத்தால்தான் இழந்தேன். அதிலிருந்து மீண்டு வருவதற்கு, தவறு செய்தவர்களை மன்னிப்பதுதான் ஒரே வழி.
இந்தியாவில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த நிலைமையை முழுமையாக மாற்ற வேண்டும்.
மேலும், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக இருப்பதனாலேயே படுகொலைகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இவ்வாறு ராகுல் காந்தி அந்தக் கூட்டத்தில் பேசியுள்ளார்.