Tamil Newsஉணவு
பயனுள்ள சமையல் குறிப்பு !
பயனுள்ள சமையல் குறிப்பு:
சாம்பார் வெங்காயத்தை எளிதில் தோல் நீக்க, 20 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் அவற்றை ஊறவைக்கவும்.
சப்பாத்தி மென்மையாக இருப்பதற்கு மாவுடன் சுடுதண்ணீர் ஊற்றி பிசைய வேண்டும்.
முட்டைகளை வேக வைக்கும்போது அவை உடையாமல் இருக்க சிறிது உப்பினை சேர்க்கவும்.
நாம் சமைத்த உணவில் உப்பு அதிகமானால் அதனுடன் உருளைக்கிழங்கை தோல் உரித்து சேர்த்தால் உப்பு கரிக்காது.
வெண்டைக்காய் சமைக்கும்போது அதன் பிசுபிசுப்பு தன்மை குறைய, அதனுடன் லெமன் சாறு அல்லது தயிர் சேர்த்து சமைக்கவும்.
15 நிமிடங்கள் குளிர்ந்த தண்ணீரில் பாதாம் பருப்பை ஊறவைத்தால் எளிதாக தோலினை நீக்கலாம்.
வெங்காயம் விரைவில் பொன்னிறமாக மாற சமைக்கும்போது சிறிது உப்பு சேர்க்கவும்.
பச்சை பட்டாணியை வேக வைக்கும்போது நிறம் மாறாமல் இருக்க சிறிது சர்க்கரை சேர்க்க வேண்டும்.