நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கமுடியாது – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று டெல்லி உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
மருத்துவப்படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வில், தமிழில் வழங்கப்பட்ட வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக மொழிப்பெயர்க்கப்பட்டிருந்தது.
இதனால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒவ்வொரு வினாக்களுக்கும் 4 மதிப்பெண்கள், வீதம் 196 மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வைநிறுத்தி வைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது.
இந்த நிலையில் நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க கூடாது என்று டெல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மதுரை ஹைகோர்ட் கிளை தீர்ப்பு வழங்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ செய்த மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களுக்கு கூடுதல் கருணை மதிப்பெண் எதுவும் வழங்கப்படாது.