நாம் இயற்கை பேரழிவின் நடுவில் இருக்கிறோம்; இதனை சமாளிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்- கேரளா முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்
கேரளா முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது;
நாம் இயறக்கை பேரழிவின் நடுவில் இருக்கிறோம்; இதனை சமாளிக்க நாம் இணைந்து ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். மழைநீர் வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு உணவு பொருட்கள் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
நிவாரண பணிகளை சீராக மேற்கொள்ள ஆட்சியாளர்களுக்கும், மீட்பு பணிகளை மேற்கொள்ள போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் உள்ளது என்றாலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் அதனை மக்களுக்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகைக்காக ஏற்கனவே உணவுப்பொருட்கள் கேரளாவுக்கு வந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் உள்ள பாதுகாப்பு மையங்களை தொடர்பு கொண்டால் உதவி கிடைக்கப்பெறும். அதிகம் வெள்ளத்தால் பாதித்த சாலக்குடி, செங்கனூர் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் 40,000 போலீசார் ஈடுபட்டுள்ளனர். நிவாரணப்பணிகளில் மத்திய படைகள் சிறப்பாக செயல்பட்டன. மத்திய அரசு சார்பில் போதிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.