fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

2019 ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் 1.02 லட்சம் கோடியை தாண்டியது !

2019 ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 503 கோடிக்கு மேல் வசூலானதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மத்திய அரசு நாடு முழுவதும் ஒரே சீரான வரியை வசூலிக்கும் நோக்கில் சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அறிமுகம் செய்தது. இந்த முறையில் வசூலாகும் வரி வருவாய் குறித்து மாதந்தோறும் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. GST மூலம் வரி வசூலாகும் வருவாய் குறித்து மாதந்தோறும் மத்திய அரசு அறிக்கை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 503 கோடியை தாண்டியதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி வருவாய் ரூ.89,825 கோடி வசூலானது. எனவே கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி வருவாய் தொகை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. நுகர்வோரின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு பொருட்களின் வரியை குறைத்த போதும், ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை கடந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. 2018-2019 நிதியாண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியிருப்பது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close