fbpx
RETamil News

பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

புத்தாண்டு மாற்று பொங்கல் ஆகிய பண்டிகைகள் நெருங்கிவருவதை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ( எழும்பூர் ) இருந்து திருநெல்வேலிக்கு ஜனவரி 12-ஆம் தேதி இரவு 10.20 மணிக்கும் , ஜனவரி-25 , பிப்ரவரி 15 ஆகிய தேதிகளில் இரவு 10.15 மணிக்கும் சுவைத்த சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.மறுமுனையில் திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு( எழும்பூர் ) ஜனவரி 6,15,27 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கும் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு ஜனவரி 11, பிரவரி 8 தேதிகளில் இரவு 10.20 மணிக்கும் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. மறுமுனையில் ஜனவரி 20 ,பிப்ரவரி 10,17 ஆகிய தேதிகளில் நெல்லையிலிருந்து சென்னை எழும்பூரிற்கு மலை 3 மணிக்கும் , ஜனவரி 16-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கும் சுவைத்த சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

மேலும் தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கும் ,செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூரிற்கும் சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இந்த ரெயில்களில் உள்ள ஏசி பெட்டிகள் மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் ஆகியவற்றிர்களுக்கான முன்பதிவு இன்று காலை முதல் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close