fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைக்கு தடா..! தமிழக அரசு அதிரடி

Tasmac shops open in Chennai delay

சென்னை: சென்னையில் மதுக்கடைகள் மற்ற பகுதிகளை போல 7ம் தேதி திறக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 40 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதனால், அரசுக்கு கிட்டத்தட்ட 4000 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டது.

ஊரடங்கு காலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கவில்லை. வரும் 7ம் தேதி முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந் நிலையில் மற்ற நகரங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் சென்னை மாநகரில் மட்டும் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேதியில் இந்த கடைகள் திறக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Tags

Related Articles

Back to top button
Close
Close