fbpx
RETamil Newsதமிழ்நாடு

தேசிய உயர்கல்வி ஆணையம் அமைப்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி

Chief Minister Narayanasamy to set up the National Higher Education Commission to remove state rights

சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுவதாக புதுவை முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நீட் மற்றும் யுஜிசி தேர்வுக்குக்கு மாற்றாக தேசிய கல்வி ஆணையத்தை அமைத்து அதன் மூலம் மாநில உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவதாக கூறினார்.

மேலும் ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர்களை கைப்பாவையாக வைத்துக்கொண்டு மாநில விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாகும் குற்றம்சாட்டினார்.

மேலும் திமுக கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

காங்கிரஸை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதி இல்லை என அப்போது கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close