fbpx
RETamil News

தென் தமிழகத்தில் அடுத்து 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு

வாங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது; தென்மேற்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் நிலநடுக்கோட்டு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவிவருகிறது. அதனால் அடுத்த இரு நாட்களுக்கு தென் தமிழகத்தின் சில மாவட்டங்களிலும் வடதமிழகத்தின் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் மேகமூட்டத்துடனும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினர்.

Related Articles

Back to top button
Close
Close