RETamil News
தாம்பரம் அருகே 2 டன் குட்கா பறிமுதல் ; இருவர் கைது செய்யப்பட்டனர்

தாம்பரம் அருகே ரத்னமங்கலத்தில் சிறப்பு காவல் படையினர் நடத்திய சோதனையில் 2 டன் குட்காவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்து மகாலட்சிமி நகர் என்ற பகுதியை சேர்ந்தவர் முருகன் . அவர் அதே பகுதியில் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார் . அவரது கடையில் திடீரென சோதனை நடத்திய காவல் துறையினர் அவர் தன் கடையில் குட்கா பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது .
மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் அந்த குட்காவை வாங்கியஇடத்தை அடைந்த காவல் துறையினர் 2 டன் குட்காவை அங்கிருந்து பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய அந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.















