தமிழ் நாட்டிலிருந்து கேரளாவிற்கு ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டது-வருவாய் நிர்வாகதுறை ஆணையர் அறிக்கை !

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 241 லாரிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளது என வருவாய் நிர்வாகதுறை ஆணையர் கூறி உள்ளார்.
சென்னையில் வருவாய் நிர்வாகதுறை ஆணையர் சத்யகோபால் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
கேரளாவிற்கு அதிகபட்ச நிவாரணம் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்பட்டு வருகின்றன. 241 லாரிகள் மூலம் ரூ.17.51 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு 306 டன் அரிசி, 230 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்பிவிட்டோம். ரூ.2.11 கோடி மதிப்புள்ள மருந்துகள் மற்றும் பொருட்களை அனுப்பி உள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 226 மருத்துவ முகாம்களை அமைத்து உதவி வருகிறோம் என கூறி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பல தன்னார்வலர்களும் பணம், காசோலை, மருந்து பொருட்கள், சோப்பு, போர்வைகள், ஆடைகள், உணவுப்பொருட்கள் இன்னும் பல பொருட்களையும் அவர்களாகவே சேகரித்து கேரளா மாநிலத்திற்கு அனுப்பி வருகின்றனர்.