RETamil Newsதமிழ்நாடு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது – மண்டல வானிலை ஆய்வு மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடு வட்டத்தில் 6 சென்டி மீட்டர் மழையும் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை, நெய்வேலியில் தலா ஐந்து சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பொழிவதற்கு வாய்ப்புள்ளது என்றும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.