பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர், அமித்ஷா இன்று சென்னை வருவதை முன்னிட்டு #GoBackAmithsha என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரண்டாய் வலம்வருகிறது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அமித்ஷா இன்று சென்னை வருகிறார். அவரின் வருகையை எதிர்த்து சமூக வலைதளமான ட்வீட்டரில் #GoBackAmithsha என்ற ஹேஸ்டேக் அதிவேகமாக பரவி வருகிறது.
இதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் காஞ்சிபுரம் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி சென்னை வருகை புரிந்தார். அந்த சமயத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருகட்டமாக #GoBackModi என்ற ஹேஸ்டேக் உலகளவில் டிரெண்ட் ஆனது குறிப்பிடதக்கது.