fbpx
Others

உக்ரைனின் அணுமின் நிலையம் ரஷியா

உக்ரைன் அணுமின் நிலையம் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது - ரஷியா தகவல்
உக்ரைனின் மிகப்பெரிய அணுமின் நிலையமான சபோரிஷியா அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் ரஷிய படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
சபோரிஷியா அணுமின் நிலையம் வெடித்தால், அது செர்னோபில் அணு உலை பாதிப்பை விட 10 மடங்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் குலேபா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சபோரிஷியா அணுமின் நிலையத்தை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படை வீரர்கள் தாக்குதல் நடத்தினார்கள் என்பது முற்றிலும் தவறான தகவலாகும். இது ரஷியாவிற்கு எதிராக ஜோடிக்கப்பட்ட பொய். சபோரிஷியா அணுமின் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி தற்போது ரஷிய படைவீரர்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மார்ச் 4-ந்தேதி ரஷிய படை வீரர்களின் மீது உக்ரைனைச் சேர்ந்த நாசக்கார குழு ஒன்று தாக்குதல் நடத்தியது. அவர்களை அடக்கவே ரஷிய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அப்போது அங்கிருந்து வெளியேறும் போது அந்த நாசக்கார குழு பயிற்சி நிலையத்தின் மீது தீக்கொளுத்தி விட்டனர். தீயணைப்பு வீரர்கள் அந்த தீயை அணைத்தனர். அணுமின் நிலையத்திலிருந்து எந்த விதமான கதிரியக்கமும் வெளியாகவில்லை, பாதுகாப்பாக உள்ளது என்று கூறியுள்ளது.

மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தம்ரஷியா அறிவிப்பு


Related Articles

Back to top button
Close
Close