fbpx
RETamil News

‘ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை, சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டோம்’ என எய்ம்ஸ் மருத்துவர்கள் வாக்குமூலம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கும் நிலையிலேயே அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை மருத்துவ ஆவணங்கள் மூலமாக தெரிந்து கொண்டோம், என எய்ம்ஸ் மருத்துவர்கள் இன்று ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணையில் கூறினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டது. இந்த கமிஷன் ஜெயலலிதா தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை அளிக்க வந்த டெல்லி எய்மஸ் மருத்துவர்கள் ஜி.சி கில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோர் இன்று ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி இன்று அவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். அதில், “ஜெயலலிதா அப்பலோவில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து கவலைக்கிடமாகவே இருந்துள்ளார் என்பதை மருத்துவ ஆவணங்கள் மூலம் தெரிந்து கொண்டோம். ஜெயலலிதாவுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை, சிகிச்சையை மேற்பார்வையிடவே அழைக்கப்பட்டோம்” என அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close