ஜலதோஷம், மூக்கடைப்புக்கு உடனடி நிவாரணம்!
சாதாரணமாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒரு நோய் தான் இந்த ஜலதோஷம். இது சாதாரணமானதாக இருந்தாலும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும்.
இது வைரஸ் மற்றும் தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் ஏற்படுகிறது. ஜலதோஷம் வருவது நல்லது தான், மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது.
ஜலதோஷம் வரப்போகிறது என்பது தொண்டையில் ஏற்படும் வலி, எரிச்சல் போன்ற அறிகுறிகளால் முன்னரே தெரிந்துக் கொள்ளலாம். இதிலிருந்தே நமக்கு ஜலதோஷம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம்.
ஜலதோஷத்திலிருந்து விடுபடுவதற்கான தீர்வு:
சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மூன்று அருமருந்துகளையும் ஒன்றாக சேர்த்து வருத்து வைத்துக்கொள்ளவும்.
அரைநெல்லிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொண்டு அவற்றை நிழலில் உலர வைக்கவும்.
நெல்லிக்காயை 3-5 நாட்கள் காயவைத்த பின்னர் சுக்கு, மிளகு, திப்பிலி, உலர்ந்த நெல்லிக்காய் போன்றவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனை காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும்.
1 வயதிற்குட்பட்ட குழந்தையாக இருந்தால் ஒரு சிட்டிகை மருந்தை எடுத்துக்கொள்ளவும். இதனை ஒரு டீஸ்பூன் தேனுடன் குழைத்து குழந்தைக்கு கொடுக்கவும். தொடர்ந்து இதனை சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் ஜலதோஷம், மூக்கடைப்பு, தும்மல், இருமல் போன்றவற்றிலிருந்து நிரந்தரமாக தீர்வு காணலாம்.
1 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 1 டீஸ்பூன் மருந்து பவுடர் எடுத்து 1/2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து கொடுக்கலாம். வாரத்திற்கு இரண்டு தடவை என தொடர்ந்து கொடுப்பதனால் ஜலதோஷத்திலிருந்து நிவாரணம் பெறலாம். வயதிற்கு ஏற்றவாறு மருந்தின் அளவை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.