fbpx
RETamil News

சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த கூடாது-சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு !

சென்னை மற்றும் சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தமிழக அரசு சார்பாக நடந்து வருகிறது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 270 கி.மீ தொலைவில் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தினால் பலரும் வீட்டையும், விளைநிலங்களையும் இழக்கும் நிலைமை ஏற்படும் என்பதால் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் மத்தியிலும், சுற்று சூழலியல் ஆர்வலர்கள் மத்தியிலும் இந்தத் திட்டத்துக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, இத்திட்டத்தால் 2,000 ஏக்கர் விலை நிலங்கள் முற்றிலும் அழிந்துவிடும் நிலைமை ஏற்படும் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தடை விதித்துள்ளது.

மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் தடை விதிக்கப்படுவதாகவும் மறு உத்தரவு வரும் வரை நிலம் கையப்படுத்தக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போது 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் அளவீடும் பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close