RETamil Newsதமிழ்நாடு
சென்னையில் பொது கட்டடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கப்படுகின்றது – ஏ.கே.விஸ்வநாதன் அதிரடி.
சென்னையில் உள்ள பல்வேறு பட்ட பொது கட்டடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கப்படுகின்றது.
சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்
காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள பல்வேறு பட்ட பொது கட்டடங்களில் சிசிடிவி கட்டாயமாக்கப்படுகின்றது என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
நகர, பெருநகர சட்ட விதி 2012-இன் படி கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது கட்டாயமாக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் நோட்டிஸ் கிடைத்த 15 நாட்களில் சிசிடிவி பொறுத்த வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் திடீர் அதிரடி உத்தரவை எடுத்துள்ளார்.
எனவே சிசிடிவி பொறுத்த தவறுபவர்களின் வியாபார உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை செய்துள்ளார்.