சுவையான ரவா கேசரி!
கேசரி செய்ய தேவையான பொருட்கள்:
ரவை 250 கி
சர்க்கரை 500கி
நெய் 50கி
ஏலக்காய்
முந்திரி
திராட்சை
தண்ணீர் (1 கப் ரவைக்கு 2 கப் தண்ணீர் அளந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு ஒரு சிட்டிகை
முதலில் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி ரவையை வருத்து கொள்ளவும். ரவையை நன்றாக வாசனை வரும் வரை வருத்ததும் ஓரு தட்டில் இட்டு ஆற வைக்கவும். பின்னர் வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
ஒரு சிட்டிகை உப்பு, கேசரி பவுடர் சேர்க்கவும். பின்னர் வருத்து வைத்துள்ள ரவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறவும். ரவை உண்டலும் உடைச்சலுமாகாமல் பார்த்துக்கொள்ளவும்.
வாணலியை தட்டு போட்டு மூடவும். 10-15 நிமிடம் வேக வைக்கவும். பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறி விடவும்.
மற்றொரு வாணலியில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் மூன்றையும் வருத்து கேசரியுடன் சேர்த்து கிளறவும். சுவையான ரவா கேசரி தயார்.