சீமான் கைது நடவடிக்கைக்கு வளைகுடா நாடுகள் செந்தமிழர் பாசறையின் கண்டன அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் எட்டு வழி சாலை மற்றும் சேலம் விமானநிலையம் விரிவாக்கம் போன்ற நாசக்கார திட்டங்களை எதிர்த்து மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து களத்தில் பல போராட்டங்களையும், கூட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்.
இதனிடையே விமானநிலைய விரிவாக்க திட்டத்திற்கு எதிராக பேசியதாகவும் வேளாண்குடி மக்களை போராட தூண்டியதாவும் புணையப்பட்ட வழக்கில் சேலம் ஓமலூர் காவல்நிலையத்தில் பத்து நாட்களுக்கு தினமும் கையெழுத்திடும்படி ஓமலூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக சேலத்தில் தங்கி கையெழுத்துயிட்டு வந்த வந்த சீமான் இன்று (18-07-2018) காலை சேலம் பாரப்பட்டி என்ற ஊரில் கூமாங்காடு கிராமத்தில் எட்டு வழி சாலை திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் பலரையும் கைது செய்து மல்லூர் காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளது மிகவும் வேதனையளிக்கிறது.
வேளாண்குடி மற்றும் சாமான்ய மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு ஆதரவாகவும் இயற்கை வளக்கொள்ளைக்கு எதிராகவும் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து எந்தவித பாகுபாடும், சமரசமும்மின்றி பல போராட்டங்களை தமிழகம் முழுவதும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்றனர்.
ஆனால் இதுபோன்ற அடக்குமுறைகள் மக்களுக்கு சனநாயகத்தின் மீது உள்ள நம்பிக்கையை கேள்விகுறியாக்குகிறது. மக்களுக்காக தான் அரசாங்கமே தவிர, அரசாங்கத்திற்காக இங்கு மக்களில்லை. தனிப்பட்ட சில பன்னாட்டு முதலாளிகளுக்காக கொண்டுவரப்படும் இதுபோன்ற நாசக்கார திட்டங்களை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒரு போதும் ஆதரிப்பதாக தெரியவில்லை.
மத்திய மாநில அரசாங்கத்தின் இது போன்ற அதிகார போக்கை வளைகுடா செந்தமிழர் பேரவை வன்மையாக கண்டிக்கின்றது. சேலம் மல்லூர் வெங்கடேசுவரா திருமண மண்டபத்தில் கைது செய்து அடைத்து வைக்கப்பட்டுள்ள சீமான் உட்பட அனைவரையும் எந்தவிதமான முன் நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யும்படி இவ்வறிக்கையின் மூலம் வளைகுடா நாடுகள் செந்தமிழர் பாசறை சார்பாக வலியுறுத்துகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது.