fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றம் செய்ய காரணம் என்ன?

இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முகமணி உட்பட உயர் அதிகாரிகளை காப்பாற்றவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான விசாரணைக் குழுவே சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் தொடங்கி உள்ளது.

கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் கையெழுத்து இயக்கம் நடத்தினார்.

இதனிடையே ஆரணியில் பேசிய வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் சிலை கடத்தல் பிரிவு பணியை முறையாக செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.

அதனால் தமிழக அரசு தானாக முன்வந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றயதாக குறிப்பிட்டார்.

இதனிடையே சிலை கடத்தல் வழக்கு விசாரணை நேர்மையாக நடந்தால் ஆட்சியில் இருக்கும் பலபேர், ஆட்சியில் இருந்த பலபேர், ஆட்சியின் நிழலின் இருக்கும் பலபேர் சிக்குவார்கள் என்பதால் வழக்கை மூடி மறைக்க தமிழக அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே முறைகேட்டில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டுமென பொதுமக்களும், பக்தர்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close