சிரியாவை அடுத்து ஆப்கனில் இருந்தும் வெளியேறுகிறது அமெரிக்க ராணுவம்

சிரியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானில் இருந்த அமெரிக்க ராணுவம் தற்போது வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் , ஐ எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த சண்டை தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது.ஐ எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் தற்போது அரசு கூட்டுப்படைகளால் மீட்கப்பட்டு விட்டது. இந்த உள்நாட்டு போரில் குர்து இனப் போராளிகளுக்கு ஆதரவாக அமெரிக்க தன் நட்டு படை வீரர்களை அனுப்பி சண்டையிட்டது. இந்நிலையில் சிரியாவில் ஐ எஸ் பயங்கரவாதிகளை தோற்கடிக்க அனுப்பப்பட்ட அமெரிக்கப்படை வெற்றிபெற்று விட்டது.அதனால் சிரியாவில் இருந்து அமெரிக்கப்படை வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த முடிவிற்கு உள்நாட்டிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜேம்ஸ் மேடிஸ் அதிரடியாக ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு ஆப்கனிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை அமெரிக்க தொடங்கியுள்ளது.
தலிபான் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து ஆப்கனிஸ்தானை அமெரிக்கா மீட்டிருந்தாலும் , அவ்வப்போது ஐ எஸ் பயங்கரவாதிகள் அங்கு நாச வேளையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதனால் அமெரிக்க ராணுவம் அங்கு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் தான் ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் தற்போது வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆனால் நாசவேலைகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருவதால் அடுத்த 6 மாதங்களுக்கு பிறகுதான் அமெரிக்கப்படைகள் அங்கிருந்து வெளியேறும் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.















