fbpx
HealthTamil News

சளி தொல்லைக்கு சிறந்த மருந்து !

மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் சிறு குழந்தைகளுக்கு  அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள். இரவு முழுவதும் தூக்கமின்றி தவிப்பார்கள்  சாப்பிட சிரமப்படுவார்கள். அப்படி சாப்பிட்டாலும் உடனே வாந்தி எடுத்து விடுவார்கள். சில சமயங்களில் காய்ச்சல் கூட வரும். மலம் வெளியேற  சிரமப்படுவார்கள். அதனால் சிறு குழந்தைகள் சொல்ல தெரியாமல் அழுவார்கள். பொதுவாக குழந்தைகளை இந்த காலகட்டத்தில் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு சளி கட்டி அவதிப்பட்டால் வீட்டில் இருக்கும்  சுக்கு, மிளகு, திப்பிலி, சித்தரத்தை நறுக்குமூலம், இவற்றை சம அளவு எடுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொண்டு 1/2 ஸ்பூன் எடுத்து தேனில்  குழைத்து கொடுத்தால் மார்பில் கட்டியிருக்கும் சளி நீங்கிவிடும். இவ்வாறு சளி பிரச்சனையால் அவதிபடுபவர்களுக்கு வயதுக்கு தகுந்தாற்போல  மருந்தினை எடுத்துக்கொள்ளலாம்.

தூதுவளை, கண்டங்கத்திரி, ஆடாதோடா, துளசி இவற்றின் இலைகளை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடியாக்கி  சூரணம் செய்து 1ஸ்பூன்  அளவு எடுத்து தேனிலோ அல்லது வெந்நீரீலோ கலந்து கொடுத்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, கபக்கட்டு போன்றவை குணமாகும். துளசி  இலைகளை பறித்து நசுக்கி அப்படியே சாறு எடுத்து மருந்துக்கு கொடுப்பார்கள். இப்படி செய்வது தவறு. ஏனெனில் துளசி இலையில் உள்ள மெல்லிய  சுனைகள் குழந்தைகளுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.

Related Articles

Back to top button
Close
Close