fbpx
RETamil News

கோயம்பேட்டில் பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கு. இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பாஸ் வாங்கிய வாகனங்களுக்கு மட்டுமே சி.எம் டி எ அதிகாரிகள் அனுமதித்தனர். அதனால் இன்று காலை வாகன நெரிசலால் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் , கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க , அங்கு காய்கரிவாங்க வரும் தனிநபர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் , சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் கோயம்பேடு நிர்வாகக் குழு சார்பில் சி.எம் டி எ அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

முதல்கட்ட நடவடிக்கையாக கோயம்பேடு மார்க்கெட்டில் கூட்ட நெரிசலை தடுக்க , நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்கே நேரடியாக சென்று காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த முறை நடைமுறையில் இருந்தாலும் ,பல தனிநபர்கள் குடும்பத்துடன் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றன.இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை கட்டுப்படுத்தும் விதமாக காய்கறிகள் , பழங்கள் மொத்தமாக வாங்குபவர்களின் வாகனங்கள் சென்று வர சுமார் 12 ஆயிரம் பாஸ்க்களை வழங்கினர். இந்த அனுமதிப்பாஸ் உள்ளவர்கள் மட்டும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வர அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் காய்கறி, பழங்கள் மற்றும் பூ வாங்குவதற்கு உரிய பாஸ்கள் இல்லாமல் வந்த அதிக வாகனங்கள் குவிந்தன. இதனால் அங்கு அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைப்பற்றி தகவலறிந்து வந்த போலீசார் 2 மணிநேரத்துக்கு மேல் போராடி வாகன நெரிசலை சீரமைத்தனர்.

மேலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு உரிய பாஸ் இன்றி வந்த அணைத்து வாகனங்களையும் திரும்பி அனுப்பினார். கோயம்பேடு மார்க்கெட்டில் கடை வைத்துள்ளவர்கள் மற்றும் மொத்த கொள்முதல் செய்பவர்கள் உரிய பாஸ் இல்லாமல் வாகனங்களுடன் உள்ளே வரக்கூடாது என சி எம் டி எ எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close